Loading...
மாத்தறை – அக்குறெஸ்ஸ பகுதியில், வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்கள் மூவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியின் பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற “பிக் மெச்” போட்டியின் நிறைவில் ஊர்வலம் சென்றபோதே குறித்த வான் விபத்துக்கு உள்ளாகியுள்ளதென கூறப்படுகிறது.
Loading...
விபத்தில் மிகக் கடுமையாக பாதிப்புக்குள்ளான மாணவனுக்கு, மாத்தறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
இதேவேளை குறித்த மாணவர்கள் அனைவரும் அடுத்த வருடம் கா.பொ.த உயர்த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...