மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மீனம்பூர் என்ற கிராமத்தில் ஆரிப்கோகன் என்பவரின் மகன் முஜிபூர்(22). இவர் சாப்ட்வேர் என்ஜினீயரான பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது.
மேலும், தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த முஜிபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காய்ச்சல் தீரவில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரியில் முஜிபூர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு கொரோனா பாதிப்பால் தான் உயிர் போனது என்ற செய்தி பீதியாக பரவியுள்ளது. இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து முஜிபூர் ரத்தத்தினை எடுத்து பரிசோதனை செய்து இருக்கின்றனர். முடிவு விரைவில் தெரியும் அதன் பின்னர் தன் அவருடைய உடலை கொடுக்க முடியும் என மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் தற்போது விசாரணையில் இறங்கி அவர் தங்கி இருந்த சென்னை பகுதிகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.