சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குற்றுயிராக மீட்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த பெண்மணி தொடர்பில் அவரது முன்னாள் காதலர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சூரிச் Hombrechtikon-ல் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற மருத்துவ உதவிக்குழுவினர், சுமார் 44 வயதுடைய பெண்மணி ஒருவரை குற்றுயிராக மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.
அவருடன் காணப்பட்ட போலந்து நாட்டவரை சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மரணமடைந்த சுவிஸ் பெண்மணியின் முன்னால் காதலர் தெரிவிக்கையில், சம்பவம் நடக்கும் போது தாம் குடியிருப்பில் இருந்திருந்தால், ஒருவே:ளை தம்மால் அவரை காப்பாற்ற முடிந்திருக்கலாம் என்றார்.
தியாகோ டயஸ் லோபஸ் என்ற அவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கூறிய தகவலில், அந்த போலந்து நாட்டவரும் மரணமடைந்த சுவிஸ் பெண்மணியும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும்,
ஆனால் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தொடர்பில் தமக்கு எந்த தகவலும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
போலந்து நாட்டவருடன் ஒன்றாக குடியிருந்து வந்தாலும், தம்முடன் நட்பு பாராட்டி வந்ததாக தியாகோ டயஸ் லோபஸ் தெரிவித்துள்ளார்.
அவர் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து சத்தம் கேட்டது உண்மை தான், ஆனால் அது ஒருவரை தாக்கியது போன்ற சத்தம் இல்லை எனவும் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.