மஹாராஷ்டிராவில் செல்லமாக வளர்க்கும் நாய்க்காக திருட்டு மின்சாரம் மூலம் 24 மணி நேரம் ஏசி வசதி செய்வருக்கு 7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் ஒருவர் பலவகையான விலை உயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். இந்தவகை நாய்கள் வெயிலின் கொடுமையால் பாதிக்கப்படாமல் இருக்க புதிய யுத்தி ஒன்றை கையாண்டிருக்கிறார். நாய்கள் உள்ள அறையில் 24 மணி நேரமும் கூலிங்காக இருக்க ஏசி வசதி செய்துள்ளார். ஆனால் இதற்கு திருட்டுத்தனமாக வயர் மூலம் மின்சாரத்தை திருடி இணைப்பு கொடுத்துள்ளார்.
இந்த முறையற்ற மின் இணைப்பு மூலம் மின்சாரம் திருடப்படுவதை அறிந்த சிலர், மஹாராஷ்டிர மின்சார வாரியம் ( MSEDCL) மின்சார அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி அந்நபரின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் மின் திருட்டை கண்டுபிடித்துள்ளனர். அதில் நாய்கள் சொகுசாக வாழ்வதற்காக அவர் 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின்சார சட்டம், 2003 இன் பிரிவு 135 (மின்சார திருட்டு) இன் கீழ் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். 34,465 யூனிட் மின்சாரத்தை திருடியதற்காக ரூ 7.22 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்தினார்.