சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவான்ஜோவில்வில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹோட்டல் இடிந்து விழுந்துள்ளது. நேற்று இந்த சம்பவம் நடந்தது.
சுமார் 70 கொரொனா தொற்றாளர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அங்கு தொடர்ந்த மீட்புப்பணிகளையடுத்து இன்று காலை வரை 49 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 பேர் இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளனர்.
சின்ஜியா எக்ஸ்பிரஸ் என்ற பெயர் கொண்ட இந்த 5 மாடி ஹொட்டல், 2018ஆம் ஆண்டு திறக்கப்பட்டிருந்தது. அங்கு 80 அறைகள் உள்ளன.
Latest on hotel collapse in east China’s Quanzhou: 49 rescued as of 08:20 am, March 8 (local time). Further rescue is under way https://t.co/eFN3AhHBYe pic.twitter.com/rP3Wgd15jt
— China Xinhua News (@XHNews) March 8, 2020