சுவிட்சர்லாந்தில் குறும்பு செயலில் ஈடுபடும் குழு ஒன்று பொது இடத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த காட்சியை மிக கேவலமாக சித்தரித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வரும் Lucerne நகர சந்தை பகுதியிலே இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சியில், மேரி குழந்தை இயேசுவை சுமந்து நிற்பதற்கு மாறாக அவர் ஜோசப்புடன் பாலியல் செயலில் செயல்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வரும் பார்வையாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த குறும்பு செயல் ஒரு சகிக்க முடியாத அவமானமாகும். இது வேடிக்கைக்காக செய்யக் கூடிய செயல் இல்லை. மத உணர்வுகளை மீறுகிறது என கண்டனங்கள் எழுந்துள்ளது. கத்தோலிக்க தேவாலயமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.