சீனாவில் தற்போது தொழில்நுட்ப தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், சில மந்த நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று அங்குள்ள மக்களும் அச்ச நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் Realme X50 Pro 5G எனப்படும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அங்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
குறித்த கைப்பேசியானது 6.44 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Snapdragon 865 processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் 32 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெராக்கள் மற்றும் 64 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய நான்கு பிரதான கமெராக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.