Loading...
மனிதநேயமற்ற பதிவுகளை தடை செய்யப்போவதாக டுவிட்டர் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
குறிப்பாக நோய்கள் மற்றும் இயலாமை தொடர்பாக பதிவேற்றம் செய்யப்படும் தவறான பதிவுகளையே இவ்வாறு தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொடர்பில் பரப்பப்படும் தவாறான தகவல்கள் தடை செய்யப்படவுள்ளன.
Loading...
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றன ஏற்கனவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான நிலையிலேயே டுவிட்டர் நிறுவனமும் குறித்த முடிவுக்கு வந்துள்ளது.
இதேவேளை தற்போது வரை சுமார் 80 வரையான நாடுகளிற்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...