தனது மனைவியின் 17 வயதான தமைக்கையின் மகளை கர்ப்பமாக்கியுள்ளார் கனடாவில் வசிக்கும் வவுனியாவைச் சேர்ந்த 39 வயதான மன்மதராசா. கனடாவில் வசிக்கும் குடும்பஸ்தர் தனது மனைவி மற்றும் 9 வயதான பிள்ளையுடன் கடந்த நவம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் வசிக்கும் அவரது மனைவியின் தமைக்கையின் இறுதி மகளின் பிறந்த தினத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த போது அவருக்கும் மனைவியின் தமைக்கையி்ன் மூத்த மகளுக்குமிடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் குறித்த குடும்பஸ்தர் தனது குடும்பத்துடன் கனடா சென்றுவிட்டார். கடந்த வாரம் மூத்த மகள் உடல் உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன் அது தொடர்பாக பொலிசாருக்கும் முறையிட்டுள்ளார்கள்.
உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சுவிஸ் பொலிசார் குறித்த கர்ப்பத்திற்கு கனடாவில் உள்ள உறவினரே காரணம் என அறிந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை சுவிஸ் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தமக்கையின் உறவினர்க்ள தெரிவித்துள்ளனர்.