Loading...
பொதுவாகவே பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை நலமாக வைக்க உதவுகிறது.
குறிப்பாக ஒவ்வொரு பழங்களின் நிறங்களும் தனி தன்மை வாய்ந்தது.அதிலும் சிவப்பு நிற பழத்திற்கென்றே பிரத்தியேக தன்மை உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Loading...
இந்த சிவப்பு நிறத்தை கொண்ட பழங்கள் உடலின் வலிமையை முழுமையாக காக்கிறது. 40 சதவீதம் இதய நோய்களை ஏற்படாமல் இவை காக்குமாம் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது அந்த சிகப்பு நிற காய்கறிகள் என்னென்ன என்பதையும் இதன் வேறு மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதையும் பார்ப்போம்.
- தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வாருங்கள் கெட்ட கொலெஸ்ட்ரோல்களை முற்றிலுமாக குறைத்து விடும் தன்மை கொண்டவை. எனவே, இவை இதய நோயை தடுத்து விடும்.
- தக்காளி ஆண்களுக்கு ஏற்பட கூடிய பிறப்புறுப்பு புற்றுநோயை இது தடுக்க கூடிய ஆற்றல் பெற்றது. இவற்றில் அதிக அளவில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி இதய நோய்கள் உருவாவதை தடுக்கும்.
- இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள இந்த மாதுளை பெரிதும் உதவுகிறது. இதில் பொட்டாசியமும் இதில் ஏராளமாகவே இருப்பதால் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
- கெட்ட கொலெஸ்ட்ரோலான LDL என்பதை குறைக்க கூடிய ஆற்றல் இந்த தர்பூசணியிற்கு உள்ளது. மேலும் ஆண்களுக்கு உருவாக கூடிய ப்ரோஸ்டேட் புற்றுநோயை இவை தடுக்கும். ரத்த நாளங்களை சீராக வைத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கும்.
- உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்த கிரான்பெரிஸ் பயன்படுகிறது. இவை சிறுநீர் பாதையில் உருவாக கூடிய H pylori என்ற நோய் தொற்றுக்களை ஏற்படாமல் தடுக்கும்.
- பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி செர்ரி பழங்களில் அதிகம் உள்ளது. மேலும் செர்ரி சாப்பிடுவதனால் உங்களின் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும், இவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறுகள் வராமல் பார்த்து கொள்ளும்.
- ரெஸ்பிபெரிஸ் நம் உடல் வலிமையை அதிகரிக்க உதவும். இவை உடலில் சேர கூடிய கெட்ட கொழுப்புகளை உடனடியாக நீக்கி விடும். இதனால், எளிதில் இதய நோய்கள் ஏற்படுவதை தடுத்து விடும்.
- கிரேப் ப்ரூட் உடலில் உள்ள கொலெஸ்ட்ரோலின் அளவை முற்றிலுமாக குறைத்து நன்மை தரும். இவற்றில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. எனவே எதிர்ப்பு சக்தியை கூட்டி உடல் வலிமை அதிகரிக்க செய்யும்.
- ஸ்ரோபரி HDL என்ற நல்ல கொலஸ்ட்ரோலை உடலில் அதிகரிக்க செய்யும். ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கும். மேலும், இவற்றில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்காக்கும்.
Loading...