உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு உலக சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தும், அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கத்திற்கு இந்தியாவில் 47 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், வாரணாசியில் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார் கோயில் குருக்கள் ஒருவர். இது தொடர்பாக வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே தகவல் வெளியிடுகையில்,
கொரோனா வைரஸ் நாடு முழுதும் பரவி வருகிறது, எனவே விஸ்வநாதக் கடவுள் சிலைக்கும் முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக்காகத்தான்.
பக்தர்கள் தெய்வச் சிலைகளை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். சிலைகளை தொட்டால் வைரஸ் பரவிவிடும்.
கோயில்களில் குருக்கள்களும், பக்தர்களும் முகமூடி அணிந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.