வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்ச்க்கரவண்டியில் சென்ற 14உவயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியின் சாரதி நேற்றிரவு (09) பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். முச்சக்கர வண்டியில் மாணவியை ஏற்றி வந்த சாரதி, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதினையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியினை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.