இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாமென சந்தேகம் நிலவுவதால் இருவரையும் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் கொரோனா தொற்றா என்பதை கண்டறிவதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இத்தாலி நாட்டிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் இத்தாலி பிரஜைகள் இருவர் இவ்வாறு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.