கொரோனா வைரஸானது ஏடிஎம் மெசின்களிலிருந்தும் பரவும் ஆபத்து இருப்பதாக பூச்சியியல் முதுநிலை வல்லுனர் மணிவர்மா தெரிவித்துள்ளார்.
உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பில் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
இதுவரை 650 வைரஸ் உள்ள நிலையில் 651 வது வைரஸ் ஆக கொரோனா பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடம் இருந்தோ, பூச்சிகளிடம் இருந்தோ பரவுவதில்லை. சுத்தத்தை பேணாத மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவும்.
சீனாவில் சுத்தம் பேணப்படாமல் இருந்ததாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அங்கு கொரோனா வேகமாக பரவுகிறது.
சாதரணமாக ஒருவர் தும்மும் போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் மூச்சுத்துகள்கள் காற்றில் பயணிக்கும் என்றும், ஒரு மீட்டர் சுற்றளவுக்கு அந்த நோயானது பரவும்.
ஒரு கழிவறையில் இருக்கின்ற வைரஸ் கிருமிகளுக்கு இணையாக ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விரல்களால் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் வைரஸ் கிருமிகள் தேங்கி இருப்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.மில் பணம் மட்டும் அல்ல கொரோனா வைரஸ் கிருமியும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகையினால் முன் எச்சரிக்கையுடன் கையுறை பயன்பாட்டினை அதிகரித்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.