இந்தியாவில் கணவன் மற்றும் மனைவி உட்பட மூன்று பேரை நண்பர் ஒருவர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சேலம் திருமலைகிரி பகுதியில் வெள்ளிப்பட்டறை நடத்தி வரும் தங்கராஜ் என்பவரிடம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியான ஆகாஷ் – வந்தனா மற்றும் அவருடைய உறவினர் சன்னிகுமார் ஆகிய 3 பேரும் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், அங்கிருந்த சிசிடிவி கமெராவினை ஆய்வு செய்த போது, ஆகாஷின் வீ்ட்டின் அருகே வசித்த இளைஞர்கள் 4 பேர் தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்பு அவர்கள் தங்கியிருந்த இடத்தினை பொலிசார் சோதனை செய்ததில், மதுபாட்டில்களை வைத்திருந்ததை அவதானித்த மதுபோதையினால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகித்ததையடுத்து, தப்பிச் சென்ற வினோத், தினேஷ், சுராஜ், விஜி என நான்கு போர் கேரள பொலிசின் உதவியில் பிடிபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று குடிபோதையில் வினோத் வந்தனாகுமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் ஆகாஷுக்கும் வந்தனாவிற்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்ததே அவர்களுடைய நண்பனான வினோத் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆகாஷ், வந்தனா தம்பதியின் 6 மாத குழந்தை மட்டும் தப்பித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.