கிரகங்களில் சனி இருக்கும் இடமும் குரு பார்க்கும் இடமும் நன்மை செய்யும். பிறக்கப் போகிற சார்வரி தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மையும் ராஜயோகமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
பொதுவாக சனி ஒருவரின் ஜாதகத்திலோ, கோச்சார ரீதியாகவோ 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரித்தால் நன்மைகளை செய்யும்.
அதே போல குருவின் பார்வை 2,4,7,9,11 ஆகிய இடங்களின் விழுந்தால் அது சுபங்களை தரும். ராகு கேது 3,6,11ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் போதும், சுக்கிரன் 6,11,12 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மைகள் நடைபெறும்.
இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
ரிஷபம்
குருவின் பார்வையால் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். சார்வரி புத்தாண்டில் ஆதாயம் விரையம் பார்த்தால் ரிஷபம் ராசிக்கு 14 ஆதாயம் 11 விரையம் இருக்கிறது.
இந்த ஆண்டில் உங்க சம்பாத்தியத்தில் செலவை விட சேமிப்பு அதிகமாகும். நன்மைகள் அதிகம் நடக்கும்
சிம்மம்
குரு பார்வை சிம்மம் ராசிக்கு சில மாதங்கள் கிடைத்தாலும் வருட மத்தியில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் இரண்டாம் வீட்டின் மீது பார்வை விழுகிறது.பணவரவு அதிகமான ஆண்டாக இருக்கப் போகிறது.
சனி பகவான் சஞ்சாரமும் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் உள்ளதால் உங்களுக்கு எதிரிகள் தொந்தரவு கடன் பிரச்சினை தீரும். நீங்க சம்பாதிக்கும் பணத்தினால் நிறைய லாபம் கிடைக்கும் செலவு குறைவாகத்தான் உள்ளது. அதிகமான பலன்களை நீங்கள் அடையப்போகிறீர்கள்.
விருச்சிகம்
குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் குதூகலத்தை தரப்போகிறது. உங்களுக்கு ஆதாயம் 5 விரையம் 5 கிடைக்கப் போகிறது. 50 சதவிகித லாபம் கிடைக்கப் போகிறது. நஷ்டம் இல்லை. வருமானம் அதிகரிக்கக் கூடிய ஆண்டாகும். சனியால் பல நன்மைகளும் கிடைக்கப் போகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராஜயோக ஆண்டாக அமைந்துள்ளது.
மீனம்
குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகிற சார்வரி தமிழ் புத்தாண்டில் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் சனி பகவான் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார் குரு பகவானும் 11ஆம் வீட்டிற்கு லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அனைத்து விதமான யோகங்களும் வரப்போகிறது. அதே நேரத்தில் ஆதாயம் 8 கிடைத்தால் விரையம் 11 நடக்கும் எனவே சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.