காஞ்சிபுரம் அருகே அழகாக இல்லை என்பதால் பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (சமையல் உரிமையாளர்). இவரது மனைவி திலகவதி.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திலகவதி கடந்த வியாழக்கிழமை ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், குழந்தை பிறந்ததை கண்டு மகிழ்ச்சியடைவதற்கு மாறாக குழந்தையின் முகம் சரியில்லை என வருந்தியுள்ளார்.
இதனால், அழகாக இல்லாத குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்த திலகவதி மற்றும் அவரது கணவர் நடராஜன் இருவரும் சேர்ந்து தனது வீட்டிற்கு அருகில் செல்லும் மஞ்சள் நீர் கால்வாயில் குழந்தையை வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று குழந்தையின் சடலம் கால்வாயில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் திலகவதி மட்டும் வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகித்த பொலிசார் திலகவதி வீட்டிற்கு சென்று கதவை தடியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் திலகவதி கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு பொலிசார் வீட்டின் உள்ளே சென்றனர்.
பொலிசாரைக் கண்ட திலகவதி கதறி அழுது குழந்தையை கால்வாயில் வீசி கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, திலகவதியை பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், தலைமறைவாகியுள்ள குழந்தையின் தந்தையை பொலிசார் தேடிவருகின்றனர்.