ஸ்ரீலங்காவில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர் மருத்துவர்கள்.
இதற்கிடையில், பொது மக்களின் நலன்கருதியும், மாணவர்களின் அச்ச உணர்வை போக்குவதற்காகவும் அரசாங்கம் இன்றிலிருந்து அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் அரசாங்கம் பொது மக்களை அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், தேவையற்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.
இதற்கிடையில், தவறான பொய்யான செய்திகளை பரப்புவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்றிலிருந்து யாழ்ப்பாணத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக எரிபொருட்களை நிரப்புவதற்கு வரிசையில் நின்றிருந்தனர்.
இச்சூழலில் இன்று காலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் இல்லை என்கிற பதாகை வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகிறது.
அரசாங்கம் கொரோனா தொடர்பில் பீதியடைய வேண்டாம் என அறிவித்திருந்த நிலையிலும் பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு தோன்றியிருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.