Loading...
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தேசிய சுற்றுலா வழிகாட்டல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோ லிவேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய சுற்றுலா வழிகாட்டல் நிறுவனத்தில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
Loading...
குறைந்தது இரண்டு மாதங்களுக்கு எந்த சுற்றுலாப் பயணிகளையும் அழைத்து வர வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
சுற்றுலா வழிகாட்டிகள் சுற்றுலாப் பயணிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும், இதன்மூலம் முழு நாட்டிலும் வைரஸ் தொற்று ஏற்படலாமென்றும், அவசர நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த முடிவை எடுக்கும்படி அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
Loading...