கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50,000 வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது.
இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான பதில் சீனத்தூதுவர் இடையே நேற்று (12) சீன தூதரகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது, சீனா மிகப்பெரிய பேரழிவுக்கு முகங்கொடுத்த பின்னர் அந்த நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த கடந்த காலப்பகுதியினுள் இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு சீன ஜனாதிபதி மற்றும் சீன மக்கள் பாராட்டை பெற்றதாக சீன பதில் தூதுவர் தெரிவித்திருந்தார்.
மேலும், கொரோனா வைரஸ் இலங்கையில் பரவினால் அதனை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பையும் வழங்க சீனா தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50,000 வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.