மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து விடுமுறைக்காக வந்த இலங்கை இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவநெல்லை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவ அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் ஒருசில தினங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபரின் உடல்நலத்தில் ஏற்பட்ட உடனடி மாற்றங்களைத் தொடர்ந்தே எமது வைத்தியசாலைக்கு அவர் சிகிச்சை பெற வந்திருந்தார் எனவும் அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.