Loading...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என நேற்று வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.
குறித்த நபர் ஏற்கனவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
இதனை மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதி செய்துள்ளதுடன், மொத்தமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...