மகாராஷ்டிரா வனப்பகுதியை சேர்ந்த புலி ஒன்று தனக்கேற்ற துணையை தேடி சுமார் 2000 கி.மீ பயணித்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிராவில் உள்ள திப்பேஸ்வர் வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இங்கு வசிக்கும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் ஜிபிஎஸ் மூலம் மற்றும் நவீன தொழிநுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு வசித்த புலி ஒன்று தனக்கு ஏற்ற காதல் ஜோடியை தேடி நடை பயணத்தை தொடர்ந்திருக்கிறது. இது தன் ஜோடியை தேடி காடு, மேடு, மலை என எதுவும் பார்க்காமல் பல்வேறு இடங்களில் அந்த புலி அலைந்து திரித்துள்ளது.
சுமார் 2000 கி.மீ பயணித்த நிலையில் தற்போது இந்த புலி த்யான் கங்கா வனப்பகுதியில் தற்போது தங்கியுள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தன் துணை தேடி அலைகிறது. ஆனால் இதற்கேற்ற ஜோடி இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இணையவாசிகள் புலிக்கான ஜோடியை தேடி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.