நீண்ட நாட்களுக்கு பின்னர் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ஷெரின்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமான ஷெரின், கடந்த சீசனில் பிக்பாஸில் கலந்து கொண்டார்.
அப்போது தர்ஷனுடன் காதல் வயப்பட்டதாக பேசப்பட்டது, ஆனால் இது வெறும் நட்பு தான் என வனிதாவுடன் சண்டையிட்டார் ஷெரின்.
பிக்பாஸ் முடிந்த பின்னர், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தர்ஷன் மீது புகார் அளித்தார் சனம்ஷெட்டி, இதற்கு ஷெரின் தான் காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஷெரின், கடந்த ஒரு மாதமாகவே என்னைப்பற்றி அதிகம் பேசவிட்டீர்கள்.
என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள், அதற்கு உங்களுக்கு அனுமதி தருகிறேன்.
ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒருபோதும் பேச வேண்டாம், போலி கணக்குகளை வைத்துக் கொண்டு ட்ரோல் செய்வதை ஏற்க முடியாது.
யாரோ செய்த தவறுக்காக என் மீது பழி சுமத்துவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன், இந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லாததால் அமைதியாக இருக்கிறேன்.
இரண்டு பேர் காதலில் பிரிந்து செல்வதை காட்டிலும் பெரிய பிரச்சனைகள் இந்த உலகத்தில் உண்டு.
எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி, எனக்காக சண்டை போடுபவர்களும், என்னுடன் சண்டை போடுபவர்களும் கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலி தான்.
இதுதான் என்னுடைய அறிக்கை, இனிமேலும் விமர்சனங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.