ஜோதிடத்தில் ஒவ்வொரு ஸ்தானமும் நமக்கு ஒவ்வொரு விடயங்களை உணர்த்தும். இதை நாம் எளிமையாக புரிந்து கொள்ள முன்னோர்கள் பல விடயங்களை நமக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதன்படி ஒவ்வொரு ராசியின் ஆறாம் வீடு கடன், உடல்நலம், மன வலி, உடல் வலி போன்ற விஷயங்களை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. தற்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைக் காணலாம்.
மேஷம்
இயற்கையிலேயே அதிக காரம் மற்றும் உப்புச் சுவையினை விரும்பும் இவர்கள், இவற்றினை அளவாக பயன்படுத்துவதன் மூலம் நன்மையினைப் பெறலாம்.
ரிஷபம்
புளிப்பு மற்றும் இனிப்பு சுவையை இயற்கையிலேயே அதிகம் விரும்புபவராக இவர்களுக்கு, உணவில் அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாவர்.உப்பு காரம் சரியாக இருந்தால் தான் இவர்கள் சாப்பிடும் குணங்களைக் கொண்டவர்கள். இவர்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையினை தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும்.
மிதுனம்
புளிப்பு மற்றும் காரம் அதிகம் விரும்பும் இவர்களுக்கு மிகவும் எளிதாக வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் வந்துவிடுமாம். ஆதலால் புளிப்பு மற்றும் காரத்தை சரி சமமான விதத்தில் சாப்பிடுவது நன்மையே.
கடகம்
இயற்கையிலேயே காரம் மற்றும் இனிப்பை அதிகம் விரும்பும் இவர்கள், அனைத்து விதமான உணவுகளையும் சுவைப்பார்கள். ருசிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் இனிப்புச் சுவையை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
பிடிவாத குணம் கொண்ட இவர்கள் தனது கொள்கையிலிருந்து மாறாதவர்களாய் காணப்படுவதுடன், காரம் மற்றும் உப்பு சுவைக்கு முக்கியத்துவம் அதிகம் வழங்குவார்கள். முன் கோபம் கூட இவர்களுக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் கார அளவை இவர்கள் அதிகம் சாப்பிடுவதுதான். இவர்கள் காரம் சம்பந்தமான உணவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
கன்னி
பொதுவாக சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கும் இவர்களுக்கு, புளிப்பு மற்றும் இனிப்பு சுவைகள் மிகவும் பிடிக்குமாம். அதே வேளையில் இவர்களுக்கு செரிமானக் கோளாறு அதிகமாக ஏற்படலாம். எனவே இவர்கள் புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையை சரிசமமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.
துலாம்
எந்த சுவையாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளும் இவர்கள் மாவு சம்பந்தமான பொருட்களையும், செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செரிமான கோளாறினைத் தடுப்பதற்கு நார்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
அதிக காரம் மற்றும் உப்புச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசக்கூடியவர்கள. ரத்தவிருத்தி சம்பந்தமான உணவுகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வது நன்மையைக் கொடுக்கும். அதேவேளையில் அதிக காரம் இவர்களது உடல் நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும்.
தனுசு
இயற்கையிலேயே திரவ ஆகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் அடிக்கடி நிகழலாம். நார்ச்சத்து அதிகமாக கொண்ட உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், புளிப்பு சம்பந்தமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்கவில்லையெனில் வாத நோய் பிரச்சினைகள் ஏற்படும்.
மகரம்
ரசித்து, ருசித்து சாப்பிடும் இவர்கள் உணவிற்கு எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பவர்களாக இருப்பார்கள். சமையல் கலையிலும் வல்லவர்களாக இருக்கும் இவர்களுக்கு, எந்தெந்த உணவோடு எந்த உணவை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்ற நுட்பத்தினை தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் இனிப்பு சுவையினை தவிர்க்காவிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுமாம்.
கும்பம்
இவர்கள் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும், சூடாகச் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். இவர்களுடைய உணவில் கட்டாயமாக கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையை மிகவும் விரும்புவார்கள். இவர்களின் உடல்வாகு இயற்கையிலேயே குளிர்ச்சியாக காணப்படுவதால், குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
எந்த உணவினை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் இவர்கள், காரம் மற்றும் இனிப்பு சுவை உணவுகளுக்கு அடிமை என்றே கூறலாம். தேங்காய் சேர்க்கப்பட்ட உணவுகள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் அதிக காரம் மற்றும் அதிக உப்பினைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும்