அமெரிக்கா தனது ஐரோப்பிய கொரோனா வைரஸ் பயண தடை பட்டியலில் பிரித்தானிய மற்றும் அயர்லாந்து குடியரசை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 123 நாடுகளில் 132,500 க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் தற்போது ஐரோப்பாவில் மையம் கொண்டுள்ளது. அதன் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இத்தாலியை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் 15 நாள் தேசிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்த காரணங்களால் 26 ஐரோப்பிய நாடுகளுக்கு பயண தடைகளை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதில் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தடை திங்களன்று உள்ளுர் நேரப்படி நள்ளிரவில் இருந்து தொடங்கும் என்று துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார்.