அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
உலகையே உலுக்கியுள்ள கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலமான தலைவர்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தானும் கொரோனாவுக்கு பரிசோதனை செய்யுள்ளதாக கூறியிருந்தார்.
அதன்படி பரிசோதனையை அவர் மேற்கொண்டார், இதன் முடிவுகள் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் மருத்துவரே இந்த பரிசோதனை முடிவின் அறிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிக்கை தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
BREAKING: White House doctor says President Trump has tested negative for COVID-19. pic.twitter.com/wjU4UZ1MYX
— Yamiche Alcindor (@Yamiche) March 14, 2020