நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமான தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
முதற் காரணியாக, மாளிகைக்குள் வருவோர் முகம்,கை,கால் கழுவிட்டு தூய்மையாக உள்வருவதற்கான ஏற்பாடுகளும், விஷக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்து வகையொன்றை பெற்றுக்கொடுத்த பின்னர் உள்நுழைய முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, விஷக் கிருமிகளை ஒழிப்பதற்காக மேறகொள்ளப்பட்டுள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மாளிகைக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி அந்த சூழலில் நடமாட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் கொரோனாவின் அச்சம் காரணமாக சில இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்திருக்கிறது. எனினும் பொது மக்கள் எவரும் அச்சமடைய வேண்டாம் என்று அராசங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.