இத்தாலியிலிருந்து இலங்கை வரவிருந்த மக்களை இலங்கை அரசு தடுத்து விட்டனர் என கோபமான இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் பலர் கடுப்பான பதிவுகளை இட்டு வருகிறார்கள் எனம் சமூக ஆர்வலர் ஜீவன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ளவர்களோ வெளிநாட்டிலிருந்து வருவோரை தாங்கள் இருக்கும் பகுதிக்கு கொண்டு வர வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. அதில் இத்தாலியே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களை காத்துக் கொண்டால் போதும் என ஓடத் துடிப்பவர்கள் இலங்கைக்கு கொரோனாவை கடத்தப் போகிறார்கள் என்பதை சிலர் நினைக்க மறந்து போகிறார்கள்.
இலங்கையிலுள்ளவர்கள் வந்துள்ளோர் எமது நாட்டவர். நோயாளியாக சந்தேகிப்பது பிரச்சனையில்லை.
வந்தவரிடமிருந்து ஒரு குடும்பத்துக்கு நோய் பரவினால் அது ஒட்டு மொத்த நாட்டுக்கும் சங்கிலி தொடராக பரவும் என யோசிக்கிறார்கள் இல்லை.
வந்ததும் சரியில்லை. வாச்சதும் சரியில்லை என்பது போல வெளிநாட்டுக்கு போனவர்களும் சரியில்லை. நாட்டில் இருப்போரும் சரியில்லை என சொல்லத் தோன்றுகிறது. (எல்லோரும் இல்லை)
வெடி குண்டிலிருந்து கூட தப்பிவிடலாம். வைரசிலிருந்து எப்படி தப்புவது? பாதுகாப்பு முறைகளை கையாளலாம். நோயாளிகளை அண்ட விடாமல் வைத்திருக்கலாம்.
சிகிச்சை அளிக்கலாம். வைத்திய சேவை சொல்வதை பின்பற்றலாம். இவை புரியாதோர் இன்னமும் வேடர் காலத்து மனிதர்கள்தான். காட்டுவாசிகள்தான்.