புதுச்சேரியில் காதல் ஜோடியிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம், அதுவும் வார இறுதி நாட்களில் வரும் பயணிகள் அங்கேயே அறை எடுத்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை சுற்றுலாவுக்கு வந்த காதல் ஜோடிகள் சுற்றிபார்த்துவிட்டு அங்கேயே அறை எடுத்து தங்கினர்.
அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி சுரேஷ் மற்றும் சதீஷ் குமார் காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளனர்.
நீங்கள் தனிமையில் இருப்பதை வெளியே கூறிவிடுவோம் எனவும், வழக்குபதிவு செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதில் பயந்துபோன ஜோடி தங்களிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளனர், மற்றொரு ஜோடியிடம் பணம் இல்லாததால் காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக புகார்கள் எழவே உண்மையை விசாரித்த காவல்துறை தலைவர் பாலாஜி இருவரையும் பணியிடை நீக்கம் செய்ததுடன் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.