Loading...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திறப்புவிழா எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுமென யாழ்ப்பாணக் குருமுதல்வர் ஜெயரத்னம் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலயத் திறப்புவிழா கடந்த 7ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி இந்நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
Loading...
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா கடற்படை அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மறைமாவட்ட ஆயர்கள் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டமொன்றை நடாத்தினர். இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணக் குருமுதல்வர் ஜெயரத்னம் தெரிவித்துள்ளார்.
Loading...