கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள நிலையில் ஊசியானது Jennifer Haller என்ற பெண்ணுக்கு முதன் முதலில் செலுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டது.
இது தொடர்பான தகவலை அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி பாதுகாப்பானதா என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த முதல் தொகுப்பின் முக்கிய குறிக்கோள் என்றும் அது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பின்னர் ஆய்வு தீர்மானிக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் Seattle நகரில் உள்ள கைசர் நிரந்தர வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகின்றன.
இது குறித்து ஆராய்ச்சி நிறுவன தலைவரான மருத்துவர், லிசா ஜாக்சன் கூறுகையில், நாங்கள் இப்போது குழு கொரோனா வைரஸாக இருக்கிறோம்.
இந்த அவசரகாலத்தில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்ய விரும்புகிறார்கள்.
Jennifer Haller என்பவர் தான் முதன் முதலில் இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
இது குறித்து Jennifer Haller கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் தன்னார்வலர்கள் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை இரண்டு நாள்களுக்கு முன்பு பார்த்தேன். பின்னர் அவர்களை தொடர்பு கொண்ட போது நேரில் வரச் சொல்லி உடலில் சில சோதனைகளை மேற்கொண்டனர். அதன்பின்னர், மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கும்படி கூறினர்.
அதன்பின்னர் முதல் ஊசி போடப்பட்டது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் தடுக்க நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. கையறு நிலையில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் என்னால் முடிந்த அளவு சிறு உதவி செய்ய முடிந்தது என்பதே மனநிறைவாக இருக்கிறது.
ஏதாவது செய்ய எனக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு, இந்த சோதனையின் அடுத்தக்கட்டம் என்னவென்றால், தினசரி உடல் வெப்பநிலையைப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அறிகுறிகள், பாதிப்புகள் குறித்து மருத்துவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தினசரி மற்றும் ஒவ்வொரு வார இறுதியிலும் உடல்நிலை பரிசோதிக்கப்படும்.
4 வாரங்களுக்குப் பின்னர் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இந்தப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக 14 மாதங்களுக்குத் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள்
இந்தப் பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படாததால் எந்த இடத்திலும் நான் அதனால் பாதிக்கப்பட போவதில்லை என கூறியுள்ளார்.
Jennifer இரண்டு டீன் ஏஜ் இளைஞர்களின் தாயார் என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ்க்கு சாத்தியமான தடுப்பூசி இவ்வளவு விரைவாக உருவாக்க காரணம் ஏற்கனவே கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களான SARS மற்றும் MERS போன்ற வைரஸ்களை பற்றி ஏற்கனவே அறிந்தவற்றை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியது முக்கிய காரணம் என்கிறார்கள்.
தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் விரைவான முன்னேற்றம் இருந்தபோதிலும், தடுப்பூசி வைரஸுக்கு எதிராக பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டாலும், குறைந்தது ஒரு வருடத்திற்கு அது மக்களுக்கு கிடைக்காது என தெரிகிறது.
தற்போது பரிசோதனை நடக்கும் ஆராய்ச்சி நிறுவனம் அனைத்து வகையான தடுப்பூசிகளையும் பரிசோதிக்கும் அரசாங்க மையங்களின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.