பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பற்று செயல்படுகின்றன என கடும் கோபம் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என அதிகளவில் மக்கள் கூடும் வகையில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என அறிவித்திருந்த நிலையில், பக்தர்கள் சிவனொளிபாதமலை சென்று வழிபாட்டுக்காக மலை ஏறுகின்றனர்.
அத்துடன் தனியார் நிறுவனங்களும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றன எனவும் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலை தொடருமானால் மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டில் கடுமையான சட்டம் போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் மக்களுக்கு அது தொடர்பில் அக்கறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இப்படி பொறுப்பற்று செயற்படுவதானால் எதற்கு சட்டம் என கடுமையான தொனியில் கொரோனா தடுப்பு செயலணியை சந்தித்த ஜனாதிபதி தெரிவித்தார்.
கொரோனா குறித்த கவலைகளை சுட்டிக்காட்டி, போட்டியை நடத்த வேண்டாம் என்று அவர் கோரிய போதிலும், ராயல் – தோமியன் வருடாந்த துடுப்பாட்ட போட்டி நடத்தினார்கள்.
அத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தப்பியோடி பிரத்தியேகமாக சிகிச்சை பெறுகின்றனர். தனியார் வைத்தியசாலை சென்று சிகிச்சை பெறுகின்றனர். இதனால் ஏனையோருக்கும் வைரஸ் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.