Loading...
கொரோனாவை எதிர்த்து போராட அமெரிக்க மக்களின் சார்பாக இலங்கைக்கு சில உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.ஏ. சந்திரசிறியிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் இதை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கையளித்தார்.
Loading...
இதில், Dupont Tyvek பாதுகாப்பு அங்கிகள், நைட்ரைல் கையுறைகள், கனரக பணிகளுக்கு பயன்படுத்தும் கையுறைகள், காலணி உறைகள், மற்றும் துப்பரவு பொருட்கள் அடங்கப்பட்டுள்ளது.
இந்த உபகரணங்களானது விமானநிலைய உத்தியோகத்தர்களை பாதுகாப்பதற்கும் COVID-19 பரவுவதை தடுப்பதற்கும் உதவும். இந்த நன்கொடையானது இலங்கைக்கு உதவுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளின் ஓரங்கமாகும்.
Loading...