இலங்கையில் வெளிநாட்டவர்கள் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் சட்டத்திட்டங்களை ஏற்படுத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண ஒரு கிரிக்கெட் போட்டியினை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள விசேட வேலைத்திட்டதின் முதற்கட்ட நடவடிக்கையாக வசீம் அக்ரமின் தலைமைத்துவத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வசீம் அக்ரம் இலங்கைக்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இந்த நாட்டில் காணி ஒன்று கொள்வனவு செய்வதற்கு விருப்பம் என தெரிவித்துள்ளார்.
அது நீண்ட காலமாக தனது மனதில் உள்ள ஒரு கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி கொள்வனவு செய்வதற்கு அவசியமாக சட்டத்திட்டங்களை தயாரித்தால் இந்த நாட்டில் காணி ஒன்று கொள்வனவு செய்து வீடொன்றை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.