Loading...
கொரோனா பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தத்தமது நாடுகளில் எல்லைகளையும் மூடியுள்ள வேளையில், பிரித்தானியா எவ்விதமான தீவிர கட்டுப்பாடுகளையும் அமுல் படுத்தாமல் இருந்தது வந்தது.
எனினும், தீவிர கட்டுப்பாடுகளை அமுல்படுத்தாது விட்டால், சுமார் 2.60.000 பிரித்தானியர்கள் கொரோனா தாக்குதலால் மரணடைய நேரிடுமென அதிகாரிகள் கொடுத்த அறிக்கையையடுத்து, ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்போலவே பிரித்தானியாவிலும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு பிரித்தானிய பிரதமர் Boris Johnson முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
அதிகாரிகளின் ஆலோசனையின்படி,
- தடிமன் மற்றும் காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களை குறைந்தது 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைப்பது …
- கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் குறைந்தது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைப்பது…
- சமூக தொடர்பாடல்கள் உள்ளிட்ட, மக்களுக்கிடையிலான நேரடி தொடர்புகளையும், வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கிடையிலான நேரடி தொடர்புகளை 75 சதவிகிதமாக குறைப்பது …
- 70 வயதை தாண்டியவர்களை வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்வது …
- பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை மூடுவது …
- உள்ளிட்ட பிரதான விடயங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Loading...