உலக அளவில் புதிய வைரஸ் கிருமி ஒன்று மக்களை தாக்கும் என விகாரி வருடத்திய ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
அது போலவே கடந்த நவம்பர் இறுதியில் சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ் நோய் கிருமி இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இன்னும் சில நாட்களில் மகரம் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போகிறார். அங்கிருந்து மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியனை பார்க்கும் போது கொரொனாவின் தீவிரம் குறையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பின் அறிகுறி
கொள்ளை நோய் பரவி வருகிறது என்றால் மரம், விலங்குகளை வைத்து நாம் கணித்து கொள்ளலாம். முதலில் வேப்ப மரத்தை நோய் தாக்கும். அதன்பின் அரச மரம், புங்க மரத்தையும் நோய் பீடிக்கும்.
அதன் பிறகு விலங்குகளில் நாய்களை முதலில் தாக்கும். நாய்களுக்கு தோல் நோயை உருவாக்கும். இதெல்லாம் வைரஸ் பரவுவதற்கான அறிகுறி. அதன் பின்னர் தான் மனிதனை தாக்கி உயிரை குடிக்கிறது.
காற்றில் வரும் வைரசை வேப்பமரம் முழுமையாக உள்வாங்கி இழுத்து பூமிக்குள் தள்ளிவிடும். இதனால் நோய் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய் மகரத்தில் உச்சம்
பங்குனி 9ஆம் தேதி மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். 16ஆம் தேதி குரு பகவானும் நீசம் பெற்று மகரத்தில் இணைகிறார். 25ஆம் தேதி மீனம் ராசியில் புதன் நீசம் அடைகிறார். சித்திரை 1ஆம் தேதி சூரியன் மேஷம் ராசியில் உச்சமடைகிறார். அப்போது உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை மேஷத்தில் உச்சம் பெற்று அமரும் சூரியன் மீது விழுகிறது. இதனால் ராஜயோகம் கூடி வரும்.
கொரோனா கட்டுப்படும்
செவ்வாய்கிழமை நாளில் உச்சம் பெற்ற செவ்வாய் பகவானின் பார்வை உச்சம் பெற்ற சூரியனுக்கு கிடைப்பதால் வைரஸ் நோய்கள் குறையும் அன்றிலிருந்து நோய் தாக்கம் படிப்படியாக குறையும் ஜூன் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
ஆரோக்கியமான உணவுகள்
வெள்ளை அணுக்கள் நம் உடம்பில் ராணுவம் போல செயல்படும். அது சரியாக இருந்தால் எந்த நோயும் உடம்பிற்குள் அண்டாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. உடம்பில் ஏற்கனவே நோய் இருப்பவர்களைத்தான் தாக்குகிறது கொரோனா எனவே சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் எந்த நோயும் எதுவும் செய்யாது.
குருவின் பலம்
குரு ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள்,காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல் தொடர்பான வியாதிகள் ஏற்படும். குருவின் காரகத்துவம் கொண்ட உணவுகளான மஞ்சள் நிற வாழைப்பழம், உலர் திராட்சை, பப்பாளி, ஆரஞ்சி, அன்னாசிபழம் போன்றவைகளை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் குருவின் பலன் கூடும்.
துளசி செடி
புதிய வகையான வைரஸ் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வீட்டின் முன்புறமோ அல்லது பின்பக்கத்திலோ துளசிசெடி வளர்க்க வேண்டும். கருந்துளசி வளர்த்தால் மிகவும் நல்லது. எந்த விதமான நோய்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம். கருந்துளசி, சீரகம், மிளகு, சுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துளசியில் பச்சை கற்பூரம், ஏலக்காய் நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம் எந்த நோயும் பாதிக்காது.