தனது கணவர் தான் வரும் விமானத்தில் சடலமாக வருவதை அறியாமல் 3 மாத கர்ப்பிணி மனைவி பயணம் செய்துள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின்பு மனைவியை அழைத்துக்கொண்டு ஓமன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கால்பந்து விளையாடிய போது கீழே சுருண்டு விழுந்தவரை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்பு ஜாகீரின் மனைவியிடம் வந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், நீங்கள் இந்தியாவிற்கு கிளம்புங்கள் என்று கூறிவிட்டு, ஜாகீரின் மனைவிக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து இந்தியாவும் அனுப்பியுள்ளனர்.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால், ஷிபானா பயணித்த விமானத்தில் தான் ஜாகீரின் சடலமும் வந்துள்ளது. 3 மாத கர்ப்பிணி என்பதால் அவரிடம் கூறாமல் அவரது நண்பர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
பின்பு ஊருக்கு வந்த பின்பு ஷிபானாவிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு கணவருடன் விமானத்தில் பயணித்த பெண், கணவர் இறந்த சம்பவம் தெரியாமல் அதே விமானத்தில் இந்தியா திரும்பிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.