Loading...
கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இணையத்தள நிறுவனங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஈடுபட்டுவருகின்றன.
இந்த வரிசையில் தற்போது புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராம் தளமும் இணைந்துள்ளது.
இதன்படி உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உள்நாட்டு சுகாதார அமைச்சுக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடும் தகவல்களை பயனர்களக்கு உடனுக்கு உடன் வழங்க முன்வந்துள்ளது.
Loading...
இந்த தகவலை தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஏனைய சமூகவலைத்தளங்களும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பிலும் அவதானமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...