கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து, பின்னணியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் லதா(32) என்ற பெண்ணிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்த லதா, கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை உறவினர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்திய வேளையில், பொலிசார் லதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, லதாவின் மரணத்தினை சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது விசாரணையில், லதா ஆட்டோவில் வேலைக்கு செல்லும் போது, பரமசிவன் என்பவருடன் நட்பாக பேசி வந்ததாகவும், இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் பரமசிவனின் மனைவி ராதிகாவிற்கு தெரியவர, அவர் குடும்பத்துடன் வந்த லதாவை தாறுமாறாக பேசி தற்கொலைக்கு தூண்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது ராதிகா உட்பட 5 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ராதிகாவையும், உடன் கூட்டாளி இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.