இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிக்குள் கொரோனா வைரஸை ஒழிக்கக்கக்கூடிய மருந்தை தெளிக்க போகிறோம் என்ற வாட்ஸ்அப் வதந்தி நேற்று மாலை முதல் வேகமாக பரவி வருகிறது.
இலங்கையர்கள் இதனால் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அந்த தகவல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையை இரு வாரங்களுக்கு முழுமையாக முடக்க போவதாகவும் செய்திகள் பரவியது எனினும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
14 நாட்கள் அடைத்து வைத்தால் உணவில்லாமல் தவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி பிரச்சினை உள்ள இலங்கை போன்ற நாட்டை அடைப்பது சிரமம். எனினும் முடியாத நிலை ஒன்று நாட்டில் ஏற்பட்டால் மாத்திரம் அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அதற்காக அவசரப்படப் போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவிலும் பெங்களூர் முழுக்க கொரோனா வைரஸை ஒழிக்கக்கக்கூடிய மருந்தை தெளிக்க போகிறோம் தெளிக்க போகிறோம் என்று மாநகராட்சி சார்பில் அறிவித்தது போல செய்தி பரவியுள்ளது.
இந்நிலையில், பெங்களூர் மாநகராட்சியில் அவ்வாறு எந்த ஒரு தெளிப்பானும் பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.எனவே அவசரமான கால கட்டத்தில் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.