Loading...
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொடர்பில் பலர் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவை தடுப்பது குறித்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஐயா படத்திலிருந்து நடிகர் வடிவேலு நடித்த ஒரு காட்சி தான் அது.
அந்த காட்சியில் நடிகர் வடிவேலு யாரிடமும் கைகுலுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பார்.
மேலும், விக்னேஷ் சிவன் இந்த வீடியோவை பதிவிட்டு, பல வருடங்களுக்கு முன்னால் வடிவேல் சொன்ன காமெடி தான் தற்போது உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Loading...