மற்றவர்கள் செய்த தவறுகளை மறப்பதும், மன்னிப்பதும் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதையும் அவர்கள் செய்த தவறு என்னவென்பதையும் பொறுத்துதான்.
சிலர் ஒருபோதும் எதிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்கமாட்டார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு முக்கிய காரணமாகும்.
குறிப்பாக காதல் விவகாரத்தில் தங்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டு விட்டால் இவர்கள் ஒருபோதும் அதனை மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.
இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த குணத்துடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வேகமாக காதலிக்க தொடங்குவதில்லை, ஆனால் அவர்களால் வேகமாக காதலை முடிக்க முடியும். அவர்கள் இரண்டாவது வாய்ப்புகளைத் தருவதில்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவர்களின் சுயமரியாதை அனுமதியளிக்காது. ஒருமுறை முடிவெடுத்து விட்டால் மனதை மாற்றிக்கொள்வது என்பது இவர்களுக்கு கடினமான ஒன்றாகும்.யாராவது ஒரு தவறு செய்து அது மன்னிக்க முடியாதது என்று இவர்கள் உணர்ந்தால் அவர்களை உடனடியாக தங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றவிடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரரிடம் நீங்கள் இரண்டாவது வாய்ப்புக்காக காத்திருந்தால் நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்திருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு வகையில் அவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டு அவர்களை சமாதானப்படுத்த அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்காது. உங்களின் வருத்தமோ அல்லது மன்னிப்போ அவர்களின் கோபத்தை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை. இவர்கள் யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்கமாட்டார்கள், ஏனெனில் மீண்டும் முட்டாளாக இவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
கடகம்
சில விஷயங்களில் கடக ராசிக்காரர்கள் அவநம்பிக்கை கொண்டவர்கள் குறிப்பாக இரண்டாவது வாய்ப்பு வழங்கும் விஷயத்தில். இதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே ஒருமுறை கொடுத்த இரண்டாவது வாய்ப்பு அவர்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்ததாக இருக்கலாம். அவர்களின் நம்பிக்கை அழிக்கப்பட்டு, அவர்களின் இதயம் ஒரு முறை உடைந்ததே போதுமென்று அவர்கள் நினைப்பார்கள். தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இவர்கள் மீண்டும் அந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை சரிசெய்வது தங்கள் வேலையல்ல என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். நீங்கள் அவர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டால் நீங்கள் அந்த தவறிலிருந்து நீங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வீர்கள் என்று இவர்கள் நினைப்பார்கள். ஆனால் ஒருபோதும் உங்களின் தவறை மன்னித்து உங்களுக்கான பாதுகாப்பான இடத்தை வழங்க அவர்கள் முயற்சிக்கமாட்டார்கள். யாரோ ஒருவர் இரண்டாவது முறையாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது முரண்பாடு என்பது மகர ராசிக்குத் தெரியும், எனவே அவர்கள் ஒருபோதும் அதனை செய்யமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையுடனும், கனிவாகவும் இருக்கிறார், ஆனால் அவர்கள் நிறைய இரண்டாவது வாய்ப்புகளைத் தருவதில்லை. ஒருவர் தங்களின் உண்மையான முகத்தை தனக்கு காட்டினால் அதனை நம்ப வேண்டும் என்பது இவர்களின் கருத்தாகும். அது இவர்களுக்கு வலியை தருமானால் அவர்களை தங்கள் வாழ்க்கையை விட்டு முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். இவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்ட அனைவருக்கும் கொடுத்தால், அவர்கள் ஏதாவது அல்லது சிறந்த ஒருவரை இழக்க நேரிடும். ஒருமுறை இவர்கள் உங்களை வெளியேற்றி விட்டால் அதோடு விட்டுவிடுங்கள், அதற்கு பின் முயற்சிப்பது முற்றிலும் வீண்.
கன்னி
தனது நண்பர்கள் மற்றும் காதலரிடம் இருந்து என்ன தேவை என்பதைப் பற்றிய தெளிவான பார்வை இவர்களுக்கு இருக்கும். அந்த நபர் இவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் போது இவர்கள் அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை, அவர்களை முற்றிலுமாக வெளியேற்றுகிறார்கள். அவர்களுடன் மீண்டும் இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இவர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பை நீங்களாக கெடுத்துக்கொண்டால் அதனை ஒருபோதும் திரும்ப பெற இயலாது.