மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா எப்படி பரவும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசாங்கம் தெளிவாக கூறினாலும் மக்களின் அச்சம் தீர்ந்தபாடில்லை.
இது செய்தால் கொரோனா வந்துவிடுமோ? அது செய்தால் கொரோனா வந்து விடுமோ? என்று மக்கள் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாலியல் உறவு மூலம் பரவாது. இதனைப் பற்றி உலக சுகாதர நிறுவனம் முழுமையான அறிக்கை இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும் இதுவரை கண்டறிந்தவரை நேருக்கு நேர் பார்த்து பேசுவது மூலமும், தொடுவது மூலமும்தான் கொரோனா பரவுகிறது. உடலுறவு மூலமாக அல்ல.
எனினும், கொரோனா தொற்றுடைய ஒருவர் தொடுவதை கூட தவிர்க்கவும். புதிதாக அறிமுகமானவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்.
கொரோனா குறித்த எச்சரிக்கைகள் அனைவரும் அறிந்ததுதான். கிட்டதட்ட ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது போல அனைத்து பொது இடங்களும் காலியாகத்தான் உள்ளது.
இந்த சூழ்நிலையில் உங்கள் துணையுடன் வெளியே செல்வது உங்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் உங்கள் இருவருக்கும் நோய்த்தொற்று இலையென்றாலும் வெளியே செல்லுமிடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.