நடிகை மது பாலா அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பியவர்.
சங்கர் இயக்கத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாரிய புகழினை பெற்று கொடுத்திருந்தது.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஆனந்தா ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படத்தில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.
தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். அது மட்டும் அல்ல, மதுபாலாவுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் பெயர் அமேயா இன்னொரு பெயர் கையா இவர்கள் இருவரும் அழகில் அம்மாவை மிஞ்சும் அளவிற்கு உள்ளனர்.
தற்போது சமூக வலைதளத்தில் அவர்களின் புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.