இரவில் ஆழ்ந்து உறங்குவதில் அடிக்கடி இடையூறு ஏற்பட்டால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது.
படுக்கையில் படுத்தபடி, உறக்கம் வராமல், அவதிப்படுபவரா நீங்கள்.?
அடிக்கடி ஆழ்ந்த உறக்கம் தடைபட்டு, இரவு நேரங்களில் நீண்டநேரம் கண்விழித்தபடி கவலைப்படுபவரா நீங்கள்.?
இப்படிப்பட்ட காரணங்களால், என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று, தீவிர ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், உறக்கத்தின்போது குறட்டை விடுபவர்கள், அடிக்கடி உறக்கம் தடைபட்டு, சிரமப்படுபவர்கள் என அனைவரையும் பரிசோதித்தபோது, அவர்களுக்கு, மற்றவர்களைவிட, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென்று, உறுதி செய்யப்பட்டுள்ளது.
உறக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தால்கூட, நரம்பு மண்டலம் பாதித்து, அதையடுத்து, மாரடைப்பு ஏற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதன் பாதிப்பை சமாளிக்க என்ன தீர்வு என்பது பற்றி, அவர்கள் எதுவும் கூறவில்லை.