நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி, மாநகரம், போன்ற படங்களை இயக்கியவர்.
மேலும் அண்மையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் விஜயின் பெயர் தற்போது வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜெடி’ என சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அவரின் முழு பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது விஜயின் படத்துடன் இணைந்த ஒரு ஐ.டி கார்டு ஒன்று சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஐ.டி கார்டில் விஜயின் புகைப்படம் மற்றும் அவர் பணிபுரியும் கல்லூரி பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும், அவரின் கதாபாத்திரத்தின் பெயரான ஜான் துரைராஜ் என்பதும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ஜான் துரைராஜ் என்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.