அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை 7000 ஆயிரத்திற்கும் அதிகமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் இதுவரை 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3பேர் வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததை அடுத்து வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்தது.
அதன் பின்னர் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த இளைஞர் பயணித்த ரயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகளின் விபரங்களை தமிழக அரசு, ரயில்வே துறையிடம் கேட்டுள்ளது. மேலும், அந்த இளைஞருடன் தங்கியிருந்த மற்றவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், அயர்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய 21 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் தற்போது தனிமை வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#coronaupdate: 21 Y student from Dublin,Ireland tested positive for #Covid19. On his arrival on 17.3 @Chennai,he was screened & home quarantined.Y’day18.3 he reported to RGGH with symptoms.Samples sent for testing y’day,confirmed positive today. Pt is stable in isolation at RGGH.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 19, 2020