இருதய இயக்க நிறுத்தம் என்பதும் மாரடைப்பு என்பதும் வெவ் வேறுவகையான நோய்கள், அந்தவகையில் முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா மாரடைப்பு அல்லாமல் இருதய இயக்க நிறுத்தம் காரணமாகவே இறந்துப் போயிருக்கின்றார்.
ஜெயலலிதாவிற்கு இருதய இயக்க நிறுத்தம் ஏற்பட்ட சில நிமிடங்களில் இரத்த ஓட்டம் குறைந்து மூளைச்சாவு ஏற்பட்டிருக்கும்.
அந்தவகையில் அவரின் இதயமாகவும், நுரையீரலாகவும் செயற்பட்டதுதான் வெளியிணைப்பு சுத்திகரிப்பு இயந்திரம்.
இவ் இயந்திரம் நிறுத்தப்பட்டவுடன் அவரது மூச்சு நின்று மரணமடைவார் என்பது அவர் இறப்பதற்கு மூன்று நாட்களிற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
இதேவேளை, மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவும் உறவுக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துவதை மோடி கட்டுப்படுத்துவரா?
சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கு என்ன உறவு இருந்தது போன்ற விவகாரங்களை இன்றைய நிஜத்தின் தேடலில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.