அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், ஜேர்மனியில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவார்கள் என்பதைக் குறித்த புதிய கணக்கீடு ஒன்றை ராபர்ட் கோச் மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
வரும் வாரங்களுக்குள்ளாக மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதை விரைவாகவும், திறம்படவும் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் 10 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் பரவிவிடும் என்கிறார் ராபர்ட் கோச் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவரான Lothar Wieler.
மக்கள் புதிய நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும் ராபர்ட் கோச் மருத்துவ ஆராய்ச்சி மையம் முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்தார் அவர்.
இப்போதைக்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மிக மிக முக்கியம். காரணம், ஜேர்மனி இன்னமும் கொரோனா பரவுதலின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்ற Wieler, 2021க்குள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாம் நம் நாட்டில், பல வாரங்கள், மாதங்கள் தொடர இருக்கும் கொள்ளைநோய் ஒன்றின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்றார் அவர்.
நேற்று 12 மணி நிலவரப்படி, ஜேர்மனியில் 9,919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.